மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது

Update:2024-11-30 00:34 IST
Live Updates - Page 6
2024-11-30 05:06 GMT

தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு-தாம்பரம் இடையேயான ரெயில் சேவையில் பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக ரெயில்கள் தாமதாக இயக்கப்படுவதாக ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.  வழக்கமான நேர அட்டவணைப்படி இல்லாமல் குறைந்த அளவிலான மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதாக ரெயில்வே துறை அறிவித்துள்ளது.

2024-11-30 05:02 GMT

▪️ சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100 சதவீதம் ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது

▪️ கனமழை இருந்த போதிலும் பால் விநியோகத்தில் எந்த தடையும் ஏற்படவில்லை.

▪️ தொடர்ந்து மழை பெய்தாலும் பொதுமக்களுக்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

2024-11-30 04:57 GMT

தொடர்ந்து வரும் கனமழையால் கிண்டி அருகே மடுவன்கரையில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். 

2024-11-30 04:51 GMT

சென்னையில் இருந்து 2 மணிக்கு மேல் மதுரை, திருச்சி, சேலம் செல்லும் இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானங்களின் நேரங்களை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

2024-11-30 04:46 GMT

பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2024-11-30 04:45 GMT

கனமழை காரணமாக சென்னை விமானநிலையம் தற்காலிகமாக பகல் 1 மணி வரை ஓடுபாதை மூடப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விமானங்கள் தரையிறக்க முடியாத சூழலால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று (நவ.30) மாலை 5 மணி வரை எந்த விமானங்களும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-11-30 04:33 GMT

சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார்.

2024-11-30 04:31 GMT

புயல் காரணமாக கனமழை பெய்யும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (நவ.30) திரையரங்குகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-11-30 04:29 GMT

மழை முன்னெச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரத்தில் 21 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

2024-11-30 04:21 GMT

புயல் மழை காரணமாக சென்னையில் இன்று 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பானம், திருச்சி, தூத்துக்குடி செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்