மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது

புயல் முழுமையாக கரையை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update:2024-11-30 00:34 IST


Live Updates
2024-11-30 19:50 GMT

மாமல்லபுரம்-புதுச்சேரி இடையேபுயல் கரை–யைக் கடந்–ததுசூறைக்காற்றுடன் மழை கொட்டியதுமாமல்லபுரம்-புதுச்சேரி இடையே ‘பெஞ்ஜல்’ புயல் நேற்று கரையை கடந்தது. இதனால் சென்னை உள்பட வடமாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சூறைக்காற்றுடன் மழை கொட்டியது.

2024-11-30 18:41 GMT

9 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் புயல் இன்னும் சற்று நேரத்தில் முழுமையாக கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2024-11-30 18:33 GMT

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னையில் 553 இடங்களில் மழைநீர் தேங்கியது. இதில் 172 இடங்களில் அகற்றப்பட்டன. 381 இடங்களில் தேங்கி உள்ளது. 99 இடங்களில் விழுந்த மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டன. சென்னையில் 6 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.

2024-11-30 17:52 GMT

பெஞ்சல் புயல் கரையக் கடந்து வரும் நிலையில்,  சென்னையில் மழை குறைந்துள்ளது

2024-11-30 17:15 GMT

பெஞ்சல் புயல் புதுச்சேரிக்கு அருகே 30 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இரவு 11.30 மணிக்குள் புயல் முழுவதுமாக கரையைக் கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

2024-11-30 17:02 GMT

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நாளை காலை 8.30 மணி வரை அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் , திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுவையில் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2024-11-30 16:04 GMT

சென்னையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

சென்னையில் மழை மற்றும் காற்றின் வேகம் குறைந்துள்ளது. முந்தைய புயல்களை போல் இந்த புயல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. சென்னை வானிலை ஆய்வு மையம் சரியான அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.சென்னையில் உள்ள 21 சுரங்கப்பாதைகளில் 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

சென்னையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழை நீர் இன்று இரவே வெளியேற்றப்படும். மின்சாரம் துண்டிப்பு புகார்கள் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது. இயற்கையை மீறி ஒன்றும் செய்ய முடியாது. பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு அவர் கூறினார்.  

2024-11-30 14:47 GMT

பலத்த காற்றுடன் கரையை கடக்கும் புயல்.. பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் - புதுச்சேரி அரசு அறிவுறுத்தல்

பெஞ்சல் புயல் தற்போது புதுவைக்கு அருகே கரையை கடந்து வருகிறது. இதனால் புதுவை, மரக்காணம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், புயல் கரையை கடப்பதால் இன்றிரவு முதல் நாளை அதிகாலை வரை பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வர வேண்டாம் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தி உள்ளது.  

2024-11-30 13:38 GMT

பெஞ்சல் புயலை தொடர்ந்து பெய்து வரும் தொடர் மழை எதிரொலியாக, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

2024-11-30 13:37 GMT

கரையை கடக்கத் தொடங்கியது ’பெஞ்சல்’ புயல்

வங்கக்கடலில் நிலவி வந்த பெங்கல் புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. புயலின் முன் பகுதி கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த 3 அல்லது 4 மணி நேரங்களில் புயல் முழுமையாக கரையை கடந்துவிடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்