மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது

Update:2024-11-30 00:34 IST
Live Updates - Page 7
2024-11-30 04:10 GMT

புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகைக்கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-11-30 04:09 GMT

கனமழை, காற்றால் சென்னை பெசன்ட் நகர் அருகே புளிய மரம் சாலையில் விழுந்தது. 

2024-11-30 04:05 GMT

புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும் - பிரதீப் ஜான்

வங்கக் கடலில் உள்ள பெஞ்சல் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும். புயல் கரையை நெருங்க தாமதமாக, தாமதமாக சென்னை, அண்டை மாவட்டங்களில் மழை அதிகரிக்கும். மரக்காணம் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். மேலும்,

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் நாளை காலை 8.30 மணி வரை கனமழை பெய்யும். புயல் கரையைக் கடக்கும் வரை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளார்.

2024-11-30 03:58 GMT

செங்கல்பட்டு அருகே திருக்கழுக்குன்றம் அருகே புயலால் இருளர் குடும்பத்தினர் சிக்கித்தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

2024-11-30 03:58 GMT

கனமழை பெய்து வருவதால் தேவையின்றி பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. கடற்கரை, கேளிக்கை நிகழ்ச்சி, பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறி உள்ளது. 

2024-11-30 03:50 GMT

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தரைக்காற்று வேகமெடுக்க தொடங்கி உள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்தகாற்றுடன் மழை பெய்து வருகிறது. 

2024-11-30 03:47 GMT

கனமழை காரணமாக சென்னையில் உள்ள 16 ஏரிகளில் 3 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. கனமழை பெய்து வருவதால் சென்னை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 19.5 அடியை தற்போது எட்டி உள்ளது. 

2024-11-30 03:42 GMT

சென்னை தரமணி எம்.ஜி.ஆர். சாலையில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.  தரமணியில் இருந்து ஓஎம்ஆர் செல்லும் இணைப்பு சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய மழை நீரை மோட்டர் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

2024-11-30 03:39 GMT

சென்னையில் இருந்து 140 கி.மீ தொலைவில் பெஞ்சல் புயல் உள்ளது. மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த புயல் தற்போது 12 கி.மீ வேகத்தில் நகர்கிறது.

2024-11-30 03:37 GMT

பெஞ்சல் புயல் காரணமாக நள்ளிரவு முதல் சென்னையில் கன மழையானது பெய்து வரும் நிலையில் சென்னை பெருங்குடியில் இருந்து ஓஎம்ஆர் சாலையை இணைக்கும் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்