புழல் ஏரியில் நீர்மட்டம் உயர்வு
கனமழை காரணமாக புழல் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
சோழவரத்தில் அதிகபட்ச மழை
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் அதிகபட்சமாக 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக ரெட் கில்சில் 28 செ.மீட்டரும், ஆவடியில் 25 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் கத்திவாக்கத்தில் 23 செ.மீட்டரும், மணலியில் 23 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.
கொளத்தூர் அன்னை இந்திரா நகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்ட காட்சி
சென்னை கொரட்டூரில் தேங்கி நிற்கும் மழை நீரில் படகு, ஜேசிபி-யில் மக்கள் செல்லும் காட்சி
கனமழை காரணமாக ராயபுரம் மண்டலம் வார்டு 56 பிரகாசம் சாலை பகுதியில் நேற்று மழை நீர் தேங்கி இருந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் டிராக்டரில் பொருத்தப்பட்ட மோட்டார் மூலம் நீரை அகற்றினர். தற்போது அந்த பகுதியில் முழுமையாக மழை நீர் வடிந்துள்ளது.
நிவாரண முகாம்களில் மக்கள்
சென்னையில் 70 நிவாரண முகாம்களில் 2 ஆயிரத்து 789 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
அம்மா உணவகத்தில் இலவச உணவு
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் உணவு இலவசமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
சென்னையில் நேற்று மதியம் 2.30 மணிக்கு பிறகு 4.30 செ.மீ மட்டுமே மழை பெய்துள்ளது. திருவள்ளூரில் 4.90 செ.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது என பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.