பெரியார் கண்ட கனவுகளை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவோம் - எடப்பாடி பழனிசாமி

பெரியார் கண்ட கனவுகளை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2024-12-24 05:55 GMT

சென்னை,

பெரியாரின் 51-வது நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் சமூகநீதி கொள்கையின் பிதாமகன், சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம், மானுடப்பற்றை தனது கடைசி மூச்சு வரை போதித்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில் அவர்தம் பெரும்புகழையும் சுயமரியாதை கொள்கைகளையும் நினைவு கூர்வதோடு, தந்தை பெரியார் கண்ட கனவுகளை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவோம்.

இவ்வாறு அதில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 




Tags:    

மேலும் செய்திகள்