இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக மறு அறிவிப்பு வரும் வரையில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு, புதுச்சேரி மீன்வளத்துறை அறிவுறுத்தல்
தங்கம் விலை சற்று உயர்வு...இன்றைய நிலவரம்
தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.57,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் ரூ.7.5 கோடி போதைப்பொருள் பறிமுதல்
இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் இலங்கை மண்ணை பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்-டெல்லியில் பிரதமர் மோடி உடனான சந்திப்பின்போது இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக உறுதி
அரசியல் பரபரப்புகளுக்கு இடையே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் ஆகிறது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தால் கூட்டுக்குழுவுக்கு அனுப்பவும் வாய்ப்பு உள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்றும் (செவ்வாய்க்கிழமை), சென்னை, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களுக்கு நாளையும் (புதன்கிழமை) மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ளது வானுவாட்டு தீவு. வானுவாட்டு தீவு நாட்டுக்கு 54 கி.மீ. தொலைவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. வீடுகள் அதிர்வதை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கமானது போர்ட்- விலாவிற்கு மேற்கே 30 கி.மீ. தொலைவில் 43 கி.மீ ஆழத்தில் தாக்கி உள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து வானுவாட்டு தீவை சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.