தங்கம் விலை - இன்றைய நிலவரம்
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57 ஆயிரத்து 840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.
24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை எட்டியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறப்புநீர் திறப்பு காரணமாக குன்றத்தூர், காவனூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம்,திருநீர்மலை, வழுதியம்பேடு உள்ளிட்ட அடையாறு கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்கனவே விடப்பட்டுள்ளது
தென்காசி மாவட்டத்தில் இடைவிடாமல் கொட்டும் கனமழையால் குற்றால மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
காலை 7 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக ஆய்க்குடி பகுதியில் 31 செ.மீ மழை, செங்கோட்டையில் 24 செ.மீ, தென்காசி நகரப் பகுதியில் 23 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது
செங்கோட்டையில் இருந்து கேரளா செல்லும் சாலை அருகே உள்ள குளத்தின் கரை உடைந்ததால் போக்குவரத்து துண்டிப்பு!
விருத்தாசலத்தில் இரவு விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் விருத்தாசலம் பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது. விருத்தாசலம் கடலூர் சாலையில் அமைந்துள்ள தாசில்தார் குடியிருப்பு மற்றும் விருத்தாசலம் போலீஸ் நிலைய பகுதியில் அப்பகுதியில் பெய்த மழை நீர் வெள்ளமாய் சூழ்ந்துள்ளது. மேலும் விருத்தாசலத்தில் நகரப் பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.