விருத்தாசலத்தில் இரவு விடிய விடிய மழை கொட்டி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (13.12.2024)
விருத்தாசலத்தில் இரவு விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் விருத்தாசலம் பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது. விருத்தாசலம் கடலூர் சாலையில் அமைந்துள்ள தாசில்தார் குடியிருப்பு மற்றும் விருத்தாசலம் போலீஸ் நிலைய பகுதியில் அப்பகுதியில் பெய்த மழை நீர் வெள்ளமாய் சூழ்ந்துள்ளது. மேலும் விருத்தாசலத்தில் நகரப் பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-12-13 03:31 GMT