திருவள்ளூர்: இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - 2 பெண்கள் உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 2 பெண்களும் உயிரிழந்தனர்.

Update: 2024-12-29 11:11 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தனியார் பள்ளி வேனில் பெண் உதவியாளர்களாக வேலை செய்து வந்த சோம்பட்டு கிராமத்தை சேர்ந்த நந்தினி மற்றும் கவரப்பேட்டையை சேர்ந்த விஜயா ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கீழ்முதலம்பேடு செல்லும் சந்திப்பு சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அதே திசையில் வந்த டிப்பர் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 2 பெண்களும் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரான நெல்லை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்