தூத்துக்குடி: இந்த ஆண்டு மொத்தம் 604 சைபர் குற்ற புகார்கள்- 48.17 லட்சம் பணம் மீட்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு மொத்தம் 604 சைபர் குற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, 48.17 லட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளது.;

Update:2025-03-21 16:31 IST
தூத்துக்குடி: இந்த ஆண்டு மொத்தம் 604 சைபர் குற்ற புகார்கள்- 48.17 லட்சம் பணம் மீட்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவில் 444 நிதிமோசடி வழக்குகள் மற்றும் 160 இதர வழக்குகள் என 604 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்சொன்ன புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு ரூ.12 லட்சத்து 83 ஆயிரத்து 315 பணம் முடக்கப்பட்டும், ரூ.48 லட்சத்து 17 ஆயிரத்து 506 பணத்தை நீதிமன்ற உத்தரவின் மூலமும், சைபர் குற்றவாளிகளிடம் இருந்து திரும்ப பெறப்பட்டும் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று இந்த ஆண்டு 6 சைபர் குற்ற வழக்குகளில் சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள், ராமநாதபுரம் மாவட்டம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று கடந்த 2½ மாதத்தில் மட்டும் 4 குற்றவாளிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

மேலும் சைபர் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதுவரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் என 10 இடங்களில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

மேலும் இதுபோன்ற சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். மேலும் செல்போன் தொலைந்து விட்டால் புகார் அளித்த விவரங்களுடன் CEIR.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறும் சைபர் குற்றப்பிரிவு சார்பாக பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்