திருக்குறள் கண்காட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திருக்குறள் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.;

Update: 2024-12-31 05:15 GMT

கன்னியாகுமரி,

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் 2-வது நாளான இன்று திருக்குறள் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து திருக்குறள் கண்காட்சியை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். திருவள்ளுவர் தோரணவாயிலுக்கு அடிக்கல் நாட்டிய அவர் சாலைக்கு திருவள்ளுவர் பெயரையும் சூட்டினார்.

விழாவின் சிகரமாக திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்