கரூரில் இன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் தள்ளிவைப்பு
கரூரில் இன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.;

கரூர்,
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த கிராம சபை கூட்டமானது நிர்வாக காரணங்களால் வருகிற 29-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் நடைபெற உள்ள கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினை பற்றிய விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்க்கப்படுகிறது.
எனவே, கிராம ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.