சென்னை சென்டிரல்-ஆவடி இடையே இன்று இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து

சென்னை சென்டிரல்-ஆவடி இடையே இன்று இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.;

Update:2025-03-26 06:38 IST
சென்னை சென்டிரல்-ஆவடி இடையே இன்று இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (புதன்கிழமை) முதல் 28-ந் தேதி வரை இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில் இன்று முதல் 28-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மின்சார ரெயில், இன்று மற்றும் நாளை ஆவடி-சென்னை சென்டிரல் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்