தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
அனல்மின் நிலையத்தில் குளிரூட்டும் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

தூத்துக்குடி,
தூத்துக்குடியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திடீரென்று நேற்று நள்ளிரவு ஒன்று மற்றும் இரண்டாவது அலகில் குளிரூட்டும் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த அறையில் இருந்த மின் வயர்கள் எரிந்து நாசமாகின. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டன.
இதனைத்தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் மேலும் தீயை பரவ விடாமல் அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாகவும், 630 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக தீ விபத்து சம்பவத்தால் அனல் மின் நிலையம் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது.