'திராவிட இயக்க படைப்பாளியாக அடையாளப்படுத்திக் கொண்டவர் வைரமுத்து' : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
வைரமுத்து தன்னை திராவிட இயக்க படைப்பாளியாக அடையாளப்படுத்திக் கொண்டவர் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

சென்னை,
கவிஞர் வைரமுத்துவின் படைப்புலகம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு மட்டுமின்றி தமிழுக்கும், தமிழ் கவிதைக்கும், இலக்கியத்திற்கும் பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்வு இது. இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் நுழைந்து வெற்றிமுகம் கண்டவர் வைரமுத்து. சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 7 முறை பெற்ற ஒரே பாடலாசிரியர்.
தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை 6 முறை பெற்றிருக்கிறார். இதுவரை 7,500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். 39 நூல்களை எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்ற இவரது 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவல் இதுவரை 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் உயர்ந்த பிறகும், தேசிய விருதுகளை பெற்ற பிறகும் தன்னை திராவிட இயக்க படைப்பாளியாக அடையாளப்படுத்திக் கொண்டவர் வைரமுத்து."
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.