திருச்சி-பாலக்காடு ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-03-17 00:25 IST
திருச்சி-பாலக்காடு ரெயில் சேவையில் மாற்றம்

திருப்பூர்,

கரூர் அருகே மூர்த்திபாளையம் ரெயில்வே யார்டில் தண்டவாளம் புதுப்பித்தல் பணிகள் நடைபெறுவதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில்(வண்டி எண்.56106) நாளை(செவ்வாய்க்கிழமை) கரூரில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி வரை இயக்கப்படும். இந்த ரெயில் ஈரோட்டில் இருந்து கரூர் சந்திப்புக்கு இயக்கப்படாது.

ஈரோடு சந்திப்பில் இருந்து கரூர் சந்திப்பிற்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயில் ஒன்று நாளை காலை 5.20 மணிக்கு இயக்கப்படும். திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயில்(56809) திருச்சியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்பட்டு கரூரில் குறுகிய நேரம் நிறுத்தப்படும். மூர்த்திபாளையம் ரெயில்வே யார்டில் பணிகள் முடிந்ததும் கரூரில் இருந்து ஈரோட்டிற்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும்.

திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயில்(56809) வருகிற 20-ந்தேதி திருச்சியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்பட்டு கரூரில் நிறுத்தப்படும். இந்த ரெயில் கரூரில் இருந்து ஈரோட்டிற்கு இயக்கப்படாது. திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ்(16843) வருகிற 20-ந்தேதி திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு கரூரில் நிறுத்தப்படும். மூர்த்திபாளையத்தில் பணிகள் முடிந்ததும் கரூரில் இருந்து பாலக்காடு டவுனுக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்