9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அண்ணன் உள்பட 4 பேர் கைது

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அண்ணன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2025-03-16 20:57 IST
9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அண்ணன் உள்பட 4 பேர் கைது

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினார். பின்னர் வீட்டில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது சிறுமியின் தாய்க்கு உறவு முறையில் அண்ணனான 17 வயது சிறுவன் மற்றும் 14 வயது சிறுவன், முனுசாமி, சக்கரவர்த்தி ஆகியோர் சிறுமியை கூட்டாக சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமி, தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, 4 பேரையும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்