வடசென்னை அனல் மின் திட்டப் பணிகளை ஆய்வு செய்த செந்தில் பாலாஜி

வட சென்னை அனல் மின் திட்டம் நிலை 3ல் தற்போது சோதனை இயக்கத்திற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.;

Update:2024-11-26 19:40 IST

சென்னை,

வட சென்னை மிக உய்ய அனல் மின் திட்டம் நிலை -3 ல் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த 07.03.2024 அன்று. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்த (1X800 மெகா வாட்) வட சென்னை மிக உய்ய அனல் மின் திட்டம் நிலை 3ல் தற்போது சோதனை இயக்கத்திற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகள் குறித்து விரிவான ஆய்வினை மேற்கொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி பொருளாதார ரீதியான மின் உற்பத்தி பணிகளை துரிதமாக முடித்து, வருகின்ற டிசம்பர் மாத இறுதிக்குள் முழுமையான மின் உற்பத்தியை தொடங்க உரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் கநத்தகுமார். இயக்குனர் (திட்டம்) கருக்குவேல் ராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்