2025-ம் ஆண்டு முதல் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்காது - நெல்லை மாநகராட்சி ஆணையர் உறுதி

2025-ம் ஆண்டு முதல் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் நேரடியாக கலக்காது என மாநகராட்சி ஆணையர் உறுதியளித்தார்.

Update: 2024-11-06 04:05 GMT

மதுரை,

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவது தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன், நீதிபதி புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜராகி விளக்கமளித்த நெல்லை மாநகராட்சி ஆணையர் சுகபுத்ரா, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை பல கட்டங்களாக தடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

இதன்படி 2-வது கட்டம் வரும் டிசம்பர் மாதமும், 3-வது கட்டம் 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்துவிடும் எனவும் குறிப்பிட்ட அவர், 2025-ம் ஆண்டு முதல் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் நேரடியாக கலக்காது என உறுதியளித்தார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள், வருகிற ஞாயிற்றுக்கிழமை நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கலக்கும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்து, விசாரணையை வரும் 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்