கோவையில் டேங்கர் லாரி கவிழ்ந்த சம்பவம்: டிரைவர் மீது வழக்குப்பதிவு

கோவை அவினாசி மேம்பாலம் அருகே எரிவாயு கொண்டு சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.;

Update: 2025-01-03 12:40 GMT

கோவை,

கோவை மாவட்டம் அவினாசி மேம்பாலம் அருகே சுமார் 20 மெட்ரிக் டன் எடை கொண்ட எரிவாயு கொண்டு சென்ற டேங்கர் லாரி இன்று அதிகாலை 3 மணியளவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் டேங்கர் பகுதி சேதம் அடைந்ததால் உள்ளே இருந்த எரிவாயு கசிந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொறியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்தை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இன்று விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்தார். 10 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு மீட்புப் பணிகள் நிறைவடைந்தது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், எரிவாயு டேங்கர் லாரி கவிழ்ந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் ராதாகிருஷ்ணன் மீது கோவை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் மரணம் விளைவிக்கக்கூடிய விதத்தில் ஓட்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Full View


Tags:    

மேலும் செய்திகள்