கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு

படகில் ஏற முயன்றபோது கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்தார்.

Update: 2024-11-21 01:12 GMT

கோப்புப்படம் 

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கீழமுந்தல் கிராமத்தை சேர்ந்த மீனவர் நாகராஜ் (30 வயது). நேற்று பெய்த கனமழையால் அதே பகுதியை சேர்ந்த உமையக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் மழைநீர் தேங்கியது. இந்த தண்ணீரை வெளியேற்றுவதற்காக கரையில் இருந்து சுமார் 30 மீட்டர் தூரத்தில் கடலில் நிறுத்தப்பட்டிருந்த அந்த படகிற்கு நாகராஜ் நீந்தி சென்றார். அவர் படகில் ஏற முயன்றபோது தவறி கடலில் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

உடனே அப்பகுதியை சேர்ந்த சக மீனவர்கள் விரைந்து சென்று நாகராஜின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வாலிநோக்கம் போலீசார் அங்கு சென்று மீனவர் உடலை பரிசோதனைக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்