கோவை: மேம்பாலத்தின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கார் சேதம்
கோவையில் மேம்பாலத்தின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கார் சேதம் அடைந்துள்ளது.
கோவை,
கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மேம்பாலத்திற்கு கீழே சாலை போக்குவரத்து வழக்கம்போல் இயங்கி வருகிறது.
இந்நிலையில், மேம்பால கட்டுமானத்தின் கான்கிரீட் பெயர்ந்து அவ்வழியாக சென்று கொண்டிருந்த கார் மீது விழுந்துள்ளது. இதில் காரின் கண்ணாடி மற்றும் முன்புற பகுதி சேதம் அடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. கார் சேதமடைந்தது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.