இனியாவது மக்களின் உணர்வுகளை மதித்து முடிவுகளை எடுக்க வேண்டும்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொங்கலன்று (ஜன.15) நடைபெறவிருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.;

Update:2025-01-14 07:14 IST

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது;

யுஜிசி நெட் தேர்வுகளை வேறொரு நாளுக்கு மாற்ற வேண்டும் என்று மத்தியக் கல்வி மந்திரிக்குக் கடிதம் எழுதியிருந்தேன். தற்போது அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பது சரியான முடிவு! தமிழ்ப் பண்பாட்டுத் திருநாட்டின்போது முக்கியத் தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு, மாநில அரசின் தலையீட்டுக்குப் பிறகு அது ஒத்திவைக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

இனியாவது நாட்டில் செயல்படும் எந்தவொரு அமைப்பும், நமது நாட்டின் பன்முகத்தன்மையையும் - இங்கு வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளையும் மதித்து முடிவுகளை எடுப்பார்கள் என நம்புவோம்! என அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்