ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் பஸ்கள் இயக்கம்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-03-25 20:00 IST
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் பஸ்கள் இயக்கம்

கோப்புப்படம்

சென்னை, 

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வருகிற 28 மற்றும் 29ம் தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக 990 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 100 பஸ்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்