சிவகாசியில் பட்டாசு விற்பனை 20 சதவீதம் சரிவு - வியாபாரிகள் கவலை

சிவகாசியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசு விற்பனை 20 சதவீதம் சரிந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.;

Update: 2024-10-28 03:46 GMT

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் 2,500-க்கும் மேற்பட்ட சில்லறை பட்டாசு கடைகள் உள்ள நிலையில், கடை உரிமையாளர்கள் ஆயுத பூஜையிலிருந்து பட்டாசு விற்பனைக்கு தயாராகி வருகின்றனர். ஆனால் இந்த தீபாவளிக்கு வழக்கமாக இருப்பதை விட வாடிக்கையாளர் வருகை குறைவாக உள்ளது. கடைகளில் உள்ள கவுண்டர்கள் வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடியுள்ளன.

மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை விரும்புவதும், மாத இறுதியில் தீபாவளி பண்டிகை நடைபெறுவதும் விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பயணச் செலவைக் குறைக்கவும், குறைந்த விலையில் உயர்தர பட்டாசுகளை வாங்கவும், தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார்கள் என்று கூறுகின்றனர். 

சிவகாசியில் சொந்தமாக கடைகளை வைத்திருப்பது போல் நடித்து, ஆன்லைனில் பட்டாசுகளை விற்கும் மோசடியாளர்களுக்கு பல வாடிக்கையாளர்கள் பலியாகின்றனர் என்று சில பட்டாசு கடைக்காரர்கள் வருத்ததுடன் தெரிவித்துள்ளனர். சிவகாசியில் கடந்தாண்டை விட பட்டாசு விற்பனை 20 விழுக்காடு சரிந்துள்ளதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். ஆன்லைனின் பட்டாசு விற்பதை முறைப்படுத்த அரசுக்கு பட்டாசு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்