விஜய்யின் வருகை பெரியார் அரசியலுக்கு மேலும் வலு சேர்க்கும்: திருமாவளவன்
விஜய்யின் வருகை பெரியார் அரசியலுக்கு மேலும் வலு சேர்க்கும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.;
திருப்பூர்,
திருப்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
2026-ல் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுவரொட்டி ஒட்டியிருப்பது, ஒரு ஜனநாயகப்பூர்வமான கோரிக்கையாகும். அதிகாரத்தை ஜனநாயகப்படுத்துவது எங்கள் நிலைப்பாடு. தற்போது திமுக கூட்டணியில் இருந்து கொண்டுதான் வலியுறுத்துகிறோம்.
பெரியார் அரசியலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், நடிகர் விஜய்யின் வருகை உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் நிலைப்பாட்டில் எங்களுக்கு சிறிதளவும் உடன்பாடில்லை. ஏற்கனவே இதனை எதிர்த்து இருக்கிறோம். மீண்டும் ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி எதிர்ப்பு குரலை ஓங்கி ஒலிக்கச்செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.