471 நாட்களுக்குப் பிறகு ஜாமீன்.. புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி

Update: 2024-09-26 09:26 GMT
Live Updates - Page 2
2024-09-26 11:49 GMT

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வருவதில் தாமதம்

செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு தொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரீம் கோர்ட்டு கூறியபடி செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்காக 2 பேர் உத்தரவாதம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த உத்தரவாத்தை விசாரணை அதிகாரியிடம் தாக்கல் செய்யுங்கள் என நீதிபதி கார்த்திகயேன் தெரிவித்தார்.

மேலும், சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் சில குழப்பங்கள் இருப்பதாகவும் உத்தரவாதத்தை நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்யவேண்டும் என குறிப்பிடவில்லை என்றும் நீதிபதி கார்த்திகேயன் கூறினார். இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வருவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

2024-09-26 11:42 GMT

செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் சில குழப்பங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

2024-09-26 10:46 GMT

செந்தில் பாலாஜியின் ஜாமீன் நடைமுறைகள் நிறைவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து சற்று நேரத்தில் வெளியே வருகிறார்.

2024-09-26 09:44 GMT

தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதாவது:-

1. செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டது தற்போதைய முதல்வர்.... எதிர்க்கட்சியில் இருக்கும்பொழுது துரோகி தன் கட்சிக்கு வந்தவுடன் தியாகியா ?

2. சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டா சிறை சென்றார்.... தியாகி என்று கூறுவதற்கு?

3.INDI... கூட்டணி இந்த ஜாமீனை கொண்டாடுகிறது இது ஜாமீன் தானே தவிர விடுதலை அல்ல

4. காவல் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டுமென்று வழக்காடு மன்றம் சொன்னவரை மந்திரி ஆக்கி கையெழுத்து இட வைக்கலாமா? என சிந்திக்கிறது திமுக ....

5. முறைகேடு செய்வதில் உறுதியாக இருந்தவரை சிறையில் உறுதியாக இருந்தார் என்று பாராட்டுகிறார் முதல்வர்.

6. 471 நாட்கள் சிறையில் வைத்திருந்தது பலமுறை வழக்காடுமன்றத்தினால் ஜாமீன் மறுக்கப்பட்டதனால்....

மத்திய அரசினால் அல்ல.

7. எமர்ஜென்சி காலத்தில்கூட இந்த அடக்குமுறை இல்லை என முதல்வர் சொல்கிறார், எமர்ஜென்சி அடக்குமுறை கொண்டு வந்தவரோடு கூட்டணியில் இருந்து கொண்டு.

ஆக ஒட்டுமொத்தமாக முறைகேடு வழக்கில் கைதானவரை உறுதியானவர் என்று பாராட்டுவது வேடிக்கை.

2024-09-26 09:28 GMT

ஜாமீன் பெற்றுள்ள செந்தில் பாலாஜி இன்று புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார். அவரை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் சிறைக்கு வெளியே திரண்டுள்ளனர். இதனால் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

2024-09-26 09:26 GMT

செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு ஜாமீன் கிடைத்ததையடுத்து தி.மு.க.வினர் உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர். பட்டாசுகளை வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

2024-09-26 09:26 GMT

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் சுப்ரீம் கோர்ட்டு இன்று ஜாமீன் வழங்கியது. திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும், சாட்சிகளை கலைக்கவோ, சந்தித்துப் பேசவோ கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ளது.

செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்தபின், அமைச்சராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் அமைச்சர் ஆவதற்கு சட்டப்பூர்வமாக எந்த தடையும் இல்லை என அவரது வழக்கறிஞர் இளங்கோ கூறியிருக்கிறார்.

அதேசமயம் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கக்கூடாது என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது. செந்தில் பாலாஜி வழக்கைப் பொருத்தவரை ஜாமீன்தான் வழங்கப்பட்டுள்ளது, வழக்கு விசாரணை முடியவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு அவர் நிரபராதி என தீர்ப்பு வரும் வரை அவருக்கு அமைச்சர் பதவி தருவது சரியல்ல என்று கருத்து தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்