சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால்... ... 471 நாட்களுக்குப் பிறகு ஜாமீன்.. புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் சுப்ரீம் கோர்ட்டு இன்று ஜாமீன் வழங்கியது. திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும், சாட்சிகளை கலைக்கவோ, சந்தித்துப் பேசவோ கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ளது.
செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்தபின், அமைச்சராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் அமைச்சர் ஆவதற்கு சட்டப்பூர்வமாக எந்த தடையும் இல்லை என அவரது வழக்கறிஞர் இளங்கோ கூறியிருக்கிறார்.
அதேசமயம் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கக்கூடாது என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது. செந்தில் பாலாஜி வழக்கைப் பொருத்தவரை ஜாமீன்தான் வழங்கப்பட்டுள்ளது, வழக்கு விசாரணை முடியவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு அவர் நிரபராதி என தீர்ப்பு வரும் வரை அவருக்கு அமைச்சர் பதவி தருவது சரியல்ல என்று கருத்து தெரிவித்துள்ளனர்.