ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்

சிறையில் அடைக்கப்பட்டு உள்ள செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

Update: 2024-07-23 15:10 GMT

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது . அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைதொடர்ந்து, செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பரிசோதனைக்கு பிறகு மருத்துவர்கள் பரிந்துரையையடுத்து ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஏற்கனவே அவர் இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர் என்பதால் அது தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர். இ.சி.ஜி., எக்கோ, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதில் செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பரிசோதனைகள் அனைத்தும் முடிந்த பிறகு அவரது டிஸ்சார்ஜ் பற்றி முடிவு செய்யப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் 2 நாள் சிகிச்சைக்கு பிறகு இன்று மாலை செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீரானதை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மீண்டும் அவர் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்