ஆடி பெருக்கு நாளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிப்பு

ஆடி பெருக்கு நாளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-08-01 14:21 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"பொதுமக்களின் நலன் கருதி, அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால், பொதுவிடுமுறை நாளான 03.08.2024 சனிக்கிழமை அன்று ஆடிப்பெருக்கு நாளில் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10.00 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடும் விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப்பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்