அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
விருதுநகர்,
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 28-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தால் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.