சேது எக்ஸ்பிரஸ் ரெயிலின் 3 பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு

சேது எக்ஸ்பிரஸ் ரெயிலின் 3 பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-09-18 06:19 GMT

சென்னை,

சேது எக்ஸ்பிரஸ் இந்திய ரெயில்வேயின் தெற்கு ரெயில்வே மண்டலத்தில் சென்னை எழும்பூர் - ராமேசுவரம் இடையே தினமும் இயக்கப்படும் ஒரு ரெயில் ஆகும். இந்த ரெயில் 23 பெட்டிகளை கொண்டது.

இந்த நிலையில், வழக்கம்போல ராமேசுவரத்தில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு சேது எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. ரெயிலானது நள்ளிரவு 1.30 மணிக்கு திருச்சி ரெயில் நிலையம் அருகே வந்தபோது, கடைசி 3 பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகளில் ரெயிலில் இருந்து கீழே இறங்கி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் கழன்று ஓடிய பெட்டிகளை மீண்டும் இணைத்தனர். இதையடுத்து 20 நிமிடம் தாமதமாக ரெயில் சென்னைக்கு புறப்பட்டது. சேது எக்ஸ்பிரஸ் ரெயிலின் 3 பெட்டிகள் கழன்று ஓடிய சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்