வயநாடு நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 333 ஆக உயர்வு

Update:2024-08-02 07:33 IST
Live Updates - Page 2
2024-08-02 02:13 GMT

316 பேர் பலி

வயநாடு நிலச்சரிவில் இதுவரை 316 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. அதேவேளை, 200க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுமார் 300 பேர் மாயம் 

வயநாடு நிலச்சரிவில் சுமார் 300  பேர் மாயமாகியுள்ளனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

1000க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்பு

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 1000க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

2024-08-02 02:08 GMT

4வது நாளாக தொடரும் மீட்பு பணி

வயநாட்டில் கடந்த 30ம் தேதி நிலச்சரிவு , காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து 4வது நாளாக இன்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

2024-08-02 02:05 GMT

வயநாடு நிலச்சரிவு:

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் கடந்த 29ம் தேதி இரவு கனமழை பெய்தது. கனமழை காரணமாக 30ம் தேதி நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 6 வரை அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.

கனமழை, நிலச்சரிவுடன் சாளியாற்றில் காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது. இதன் காரணமாக முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்தன. இரவு, அதிகாலை நேரம் என்பதால் மக்கள் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர். மேலும், காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து 30ம் தேதி காலை முதல் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

வயநாடு நிலச்சரிவு தொடர்பான செய்திகள்.. மேலும் படிக்க... 

நடந்தது என்ன? - வயநாடு நிலச்சரிவில் இருந்து உயிர் தப்பியவர்களின் பகீர் அனுபவம்

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 296 - ஆக உயர்வு- 3 வது நாளாக தொடரும் மீட்பு பணி

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு - 2வது நாளாக தொடரும் மீட்புப்பணி

நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள்... என்ன நடந்தது வயநாட்டில்? - முழு விவரம்

Tags:    

மேலும் செய்திகள்