உத்தர பிரதேசம் : போட்டோ ஸ்டுடியோ வளாகத்தில் தீ விபத்து
லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள போட்டோ ஸ்டுடியோ வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது;
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள பல மாடி கட்டிடத்தில் அமைந்துள்ள போட்டோ ஸ்டுடியோ வளாகத்தில் நேற்று(07.12.2024) மாலை தீ விபத்து ஏற்பட்டது. லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் போலீஸ் ஸ்டேஷன் எல்கைக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதனால் போட்டோ ஸ்டுடியோ வளாகத்தில் இருந்து, வெளியான பெரும் கருப்பு புகையால் வானத்தை இருள் சூழ்ந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து தீயை அணைத்தனர். தீவிபத்துக்கான முதன்மைக் காரணம் ஷார்ட் சர்க்யூட் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து அங்கு உள்ள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.