சத்தீஸ்கர்: என்கவுன்டரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் 2 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.;

Update: 2024-09-24 19:35 GMT

கோப்புப்படம்

சுக்மா (சத்தீஸ்கர்):

சத்தீஷ்கார் மாநிலம் சுக்மாவில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு துப்பு கிடைத்தது. இதன்பேரில் பாதுகாப்புப்படை வீரர்களின் உதவியுடன் தனிப்படை போலீசார் சிந்தவாகு அருகே வனப்பகுதியில் நக்சலைட்டுகள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அடர்வனத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருந்த கூடாரங்களை சுற்றி வளைத்தனர். அப்போது நக்சலைட்டுகள் பாதுகாப்புபடையினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புபடையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 நக்சலைட்டுகள் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.

இதனைத்தொடர்ந்து சுக்மா எஸ்.பி. கிரண் சவான், கொல்லப்பட்ட இரண்டு நக்சலைட்டுகளின் உடல்களையும் தங்களுடன் எடுத்துச் சென்றதாகக் கூறினார். அப்பகுதியில் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்