ஒடிசாவில் புதிய வகை கெண்டை மீன் கண்டுபிடிப்பு

கொல்கத்தாவில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்திற்கு அந்த மீன் இனங்கள் அனுப்பப்பட்டன.;

Update:2024-12-01 09:14 IST

புவனேஸ்வர்,

ஒடிசாவில் மத்திய பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை சார்பில் அங்குள்ள இந்திராவதி ஆற்றில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆராய்ச்சியில் 2 புதிய மீன் இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொல்கத்தாவில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்திற்கு அந்த மீன் இனங்கள் அனுப்பப்பட்டன. ஆராய்ச்சியில் அவை மஹசீர் கெண்டை வகையை சேர்ந்தவை என அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்கு புதிய மீன் இனங்களாக அங்கீகாரம் அளிக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. 'டோர் டோர்' மற்றும் 'டோர் புட்டிடோரா' என அந்த புதிய வகை கெண்டை மீன் இனங்களுக்கு அறிவியல் பெயர்களாக வைக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்