இன்றும் நஷ்டத்தை சந்தித்த பங்கு சந்தை

டாடா மோட்டார்ஸ், லார்சன் அன்ட் டூப்ரோ, சன் பார்மா, கோடக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பவர் கிரிட் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு சாதகமான நிலையில் இருந்தன.

Update: 2024-07-25 11:52 GMT

மும்பை,

பட்ஜெட் மற்றும் உலக அளவில் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக இன்றும் பங்கு சந்தைகள் நஷ்டத்தை சந்தித்தன. செக்யூரிட்டி பரிவர்த்தனை வரி மற்றும் குறுகிய கால மூலதன ஆதாய வரி உயர்வுக்கு பிறகு அதிக வெளிநாட்டு நிதி வெளியேறியதால் சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாள் இறுதியில், மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 280.16 புள்ளிகள் குறைந்து 80,148.88 புள்ளிகளாக இருந்தது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 65.55 புள்ளிகள் சரிந்து 24,413.50 புள்ளிகளாக இருந்தது. தொடர்ந்து இன்று 5-வது நாளாக சந்தை சரிவை சந்தித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜூன் காலாண்டு வருவாய், முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்த தவறிய நிலையில், ஆக்சிஸ் வங்கி பங்குகள் 5 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன.

நெஸ்லே, டைட்டன், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, டாடா ஸ்டீல், இண்டஸ்இண்ட் வங்கி, ஐ.டி.சி., ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை பின்தங்கி இருந்தன.

டாடா மோட்டார்ஸ், லார்சன் அன்ட் டூப்ரோ, சன் பார்மா, கோடக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பவர் கிரிட் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு சாதகமான நிலையில் இருந்தன.

ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை சரிவை சந்தித்தன. புதன்கிழமை அமெரிக்க சந்தைகள் கணிசமாக குறைந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எப்.ஐ.ஐ.) புதன்கிழமை ரூ.5,130.90 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றதாக பரிமாற்ற தரவுகள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்