ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது.;
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அதன்படி, 90 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 23 ஆயிரத்து 176 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 687 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 48 ஆயிரத்து 729 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
169 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 76 ஆயிரத்து 499 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 321 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பின்நிப்டி 22 ஆயிரத்து 722 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
216 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 229 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 665 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 55 ஆயிரத்து 284 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.