மத்திய மந்திரி சிராக் பாஸ்வானுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
மத்திய மந்திரி சிராக் பாஸ்வானுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.;
புதுடெல்லி,
லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவரும், மத்திய மந்திரியுமான சிராக் பாஸ்வானுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 33 பாதுகாப்பு பணியாளர்கள் 24 மணி நேரமும் பாஸ்வானைப் பாதுகாப்பதற்காக நிறுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுத் துறை சார்பில் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சிராக் பாஸ்வானுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு சார்பில் அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பாதுகாப்புத் தொடர்பான காரணங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
அக்.10 முதல் சிராக் பாஸ்வானுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக, இரண்டாவது உயரிய பாதுகாப்பான 'ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படை' (எஸ்.எஸ்.பி) சார்பில் அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.