புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் டெங்குவால் பாதிப்பு

தனியார் மருத்துவமனையில் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;

Update: 2024-09-26 09:25 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கடந்த சில நாட்களாக உடல் அசதியுடன் சளி, காய்ச்சலால் கடும் அவதிக்குள்ளானார். இதற்காக மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

அப்போது டாக்டர்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெறுமாறு ஆலோசனை தெரிவித்தனர். அதன்படி அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்ததில் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக டெங்கு, சிக்குன் குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்