ஜம்முவில் பிரதமர் மோடி 14-ம் தேதி பிரசாரம்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ஜம்முவில் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினார்.

Update: 2024-09-08 10:51 GMT

புதுடெல்லி:

90 தொகுதிகளை கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு வருகிற 18, 25 மற்றும் அக். 1  ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. 51 தொகுதிகளுக்கு அந்த கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தேசிய மாநாடு கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் 32  தொகுதிகளில் நிற்கிறது. தேசிய மாநாட்டு கட்சி 51 இடங்களில், போட்டியிடுகிறது.

கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தேசிய பாந்தர்ஸ் கட்சி தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி ஜம்முவில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். வரும் 14- ந்தேதி அவர் ஜம்முவில் பிரசாரம் செய்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி 2 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பேசுவார் என்று கூறப்படுகிறது. ஜம்மு பகுதியில் மோடியின் பிரசாரம் பா.ஜ.க.வுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்று அந்த கட்சி கருதுகிறது. பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஜம்முவில் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினார். அவர் அடுத்த கட்டமாக ரஜோரி, பூஜ் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்