அம்பேத்கர் விவகாரம்: அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே

அம்பேத்கரை அவமதித்தவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்கியிருக்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

Update: 2024-12-18 12:48 GMT

புதுடெல்லி,

புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் கருத்து கண்டிக்கத்தக்கது. வணங்கப்பட வேண்டிய தலித்தலைவர் ஒருவர் அவமானப்படுத்தப்பட்டது வருத்தமளிக்கிறது. பிரதமர் எக்ஸ் வலைதளத்தில் 6-7 பதிவுகள் செய்தார். அதற்கான அவசியம் என்ன? டாக்டர் அம்பேத்கரை அவமதித்தவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்கியிருக்க வேண்டும்.

எங்கள் கோரிக்கை என்னவென்றால், அமித்ஷா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், பிரதமர் மோடிக்கு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மீது நம்பிக்கை இருந்தால், நள்ளிரவுக்குள் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் அமைச்சரவையில் தொடர  உரிமை இல்லை, அவரை பதவி நீக்கம் செய்தால் மட்டுமே மக்கள் அமைதியாக இருப்பார்கள். இல்லையெனில் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அம்பேத்கருக்காக மக்கள் தங்கள் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக உள்ளனர் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்