சென்னை கடல்நீர் மட்டம் ஆண்டுக்கு 4.31 மி.மீ உயர்வு

பருவநிலை மாற்றத்தால் சென்னை உள்ளிட்ட இந்திய கடற்கரை பகுதிகளில் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2024-12-18 14:41 GMT

புதுடெல்லி,

பருவநிலை மாற்றத்தால் இந்திய பெருங்கடலில் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். மக்களவையில் ஆந்திர எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:-

பருவநிலை மாற்றத்தால் சென்னை உள்ளிட்ட இந்திய கடற்கரை பகுதிகளில் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 1993 முதல் 2020 வரையிலான கணக்கீட்டின்படி சென்னை கடல் பகுதியின் நீர்மட்டம் 4.31 மி.மீ உயர்ந்துள்ளது. பல்வேறு காலநிலை மாற்றங்களால் ஆண்டுக்கு ஆண்டு கடல் நீர்மட்டம் பெரியளவில் உயர்ந்து வருகிறது. ஆந்திரா கடலோர பகுதியில் கடல் மட்டும் கவலைக்கொள்ளும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஆந்திர பகுதியில் கடல் மட்டும் உயர்வால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசு ஆய்வு செய்யவில்லை. சென்னையில் 4.31 மி.மீ., மும்பையில் 4.59 மி.மீ., கொச்சியில் 4.10 மி.மீ., விசாகப்பட்டினம் 4.27 மி.மீ., கடல் மட்டம் உயர்ந்துள்ளது. கடந்த நூற்றாண்டில் இந்திய பெருங்கடலின் மட்டம் ஆண்டுக்கு 1.7 மி.மீ என்ற அளவுக்கு உயர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்