ஜம்மு காஷ்மீரில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

ஜம்மு காஷ்மீரில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றது.;

Update:2025-03-19 11:34 IST
ஜம்மு காஷ்மீரில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

Image Courtesy : ANI

ஸ்ரீநகர்,

எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான விசாரணைக்காக ஜம்மு காஷ்மீரில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றது. உளவுத்துறையிடம் இருந்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் இன்று காலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர். பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்