புது டிரெண்டிங்... உறவுகள் கசந்ததும் பலாத்காரம் என வழக்குகள்: சுப்ரீம் கோர்ட்டு வேதனை

பெண் ஒருவர் அளித்த பாலியல் பலாத்காரம் பற்றிய எப்.ஐ.ஆர். பதிவை ரத்து செய்ய கோரி, ஆண் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2024-11-28 07:10 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் அந்நிய நாடுகளின் கலாசார மோகம் அதிகரித்து காணப்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் உணவு பழக்கங்கள், ஆடைகளை அணிதல் ஆகியவற்றில் தொடங்கி அவர்களின் வாழ்க்கை முறையையும் தழுவி ஏற்று கொள்வது அதிகரித்து வருகிறது. இந்தியாவின் கலாசாரம் மெல்ல மறைந்து, வேற்று நாகரீகத்திற்கு மக்கள் மாறி வருகின்றனர். நாட்டில் லிவிங் டுகெதர் எனப்படும் கலாசாரமும் அதிகரித்து காணப்படுகிறது.

சில சமயங்களில் அந்த உறவில் ஈடுபடுபவர்கள் இடையே மோதலும் ஏற்படுகிறது. இந்த மோதல் முற்றி சில சமயங்களில் உறவுகள் பிரிவதிலும் முடிந்து விடுகிறது. அதுபோன்ற சூழலில், பெண்களே அதிகம் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர்.

இந்த நிலையில், இதுபோன்றதொரு உறவில் இருந்து, அது முடிவுக்கு வந்ததும், ஆண் ஒருவருக்கு எதிராக பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்திருக்கிறார். அதன்பேரில் எப்.ஐ.ஆர். ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த எப்.ஐ.ஆர். பதிவை ரத்து செய்யும்படி அந்த நபர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

இந்த மனு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் என். கோடீஸ்வர சிங் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அவர்கள் மனுவை விசாரணை மேற்கொண்டு கூறும்போது, இதுபோன்ற விவகாரங்களுடன் தொடர்புடைய எண்ணற்ற வழக்குகள் நீதிமன்றத்திற்கு வந்துள்ளன.

நீண்டகாலத்திற்கு கருத்தொருமித்து உறவுகளில் தொடர்ந்து நீடித்து இருப்பவர்கள், அந்த உறவு கசந்ததும், அதனை குற்ற செயலாக்க கோரி, நீதி கேட்கும் வேதனை அளிக்கும் டிரெண்ட் (நடைமுறை) காணப்படுகிறது என தெரிவித்தனர்.

எங்களுடைய கருத்தின்படி, எதிர்ப்பு எதுவுமின்றி இருவருக்கு இடையே நீண்டகால உடல் சார்ந்த உறவுகள் இருக்கும்போது, திருமணத்திற்கு அந்த பெண் வற்புறுத்தினால், அது கருத்தொருமித்த ஓர் உறவுக்கான அடையாளம்.

பொய்யான திருமண வாக்குறுதி அடிப்படையில் ஆண் நபர் உறவை ஏற்படுத்தினால், அது உண்மையை தவறாக புரிந்து கொள்ளும் அடிப்படையிலானது என நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்