பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண் கைது
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண் ஒருவர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.;
மும்பை,
பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 34 வயது பெண் ஒருவர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்ட அவர், பிரதமரை கொலை செய்வதற்கான திட்டமும், ஆயுதமும் தயாராக இருப்பதாக கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மிரட்டல் விடுத்த அந்த பெண்ணை மும்பை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அம்போலி காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளநிலையில், கைது செய்யப்பட்டுள்ள பெண்ணுக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதும் போலீசார் முழுமையான விசாரணையைத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. சந்தேக நபரைக் கண்காணிக்கும் போது அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்படுவதை போலீசார் உறுதிசெய்துள்ளனர்.