பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக மாயாவதி மீண்டும் தேர்வு

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மாயாவதி மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.;

Update:2024-08-27 16:25 IST

File image

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு, தேசிய அளவிலான மூத்த நிர்வாகிகள், மாநில கட்சி அலகுகள் மற்றும் நாடு முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவராக மீண்டும் மாயாவதி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 68 வயதான மாயாவதி உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரியாக நான்கு முறை பதவி வகித்தவர். பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷி ராம் 20 ஆண்டுகளுக்கு முன்பு மாயாவதியை தனது அரசியல் வாரிசாக அறிவித்தார். மேலும் கடந்த 2003ம் ஆண்டு முதல் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவராக மாயாவதி பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்