மராட்டியம்: 500 கிலோ மாட்டிறைச்சியை காரில் கொன்டு சென்ற 6 பேர் கைது

மராட்டிய மாநிலத்தில் 500 கிலோ மாட்டிறைச்சியை காரில் கொண்டு சென்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2025-03-14 21:47 IST
மராட்டியம்: 500 கிலோ மாட்டிறைச்சியை காரில் கொன்டு சென்ற 6 பேர் கைது

மும்பை,

மராட்டிய மாநில போலீசாருக்கு நாசிக் நகரில் சிலர் ஒரு காரில் மாட்டிறைச்சியை கொண்டு செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நாசிக் நகரின் கோடே நகர் பகுதியில் போலீசார் பொறி வைத்து காத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு கார் வருதை கண்டனர். அதில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ. 3.50 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ மாட்டிறைச்சியை கண்டுபிடித்தனர். பின்னர் அதனை பரிமுதல் செய்த போலீசார் இதனை கடத்தி வந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாட்டிறைச்சியை கடத்தியவர்கள் ஷாருக் நிசார் பிஞ்சாரி, சமீர் கலீல் ஷேக், அயன் ஜப்பார் ஷேக், ஆசிப் ஹுசைன் குரேஷி, ஹுகைப் உமர்சஹாப் குரேஷி, மற்றும் அர்மான் இஸ்மாயில் ஷேக் என அடையாளம் காணப்பட்டனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்