கர்நாடகா: எலிகளை விரட்ட ஸ்பிரே அடித்ததில் கடுமையான பாதிப்பு; 19 மாணவர்களுக்கு சிகிச்சை

கர்நாடகாவில் எலிகளை விரட்ட ஸ்பிரே அடித்ததில் 3 மாணவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டு ஐ.சி.யு.வில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Update: 2024-08-19 08:47 GMT

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் ஆதர்ஷ் செவிலியர் கல்லூரி விடுதியில் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்களில் சிலருக்கு சுவாச பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதன்படி 19 மாணவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

விடுதியில் எலிகள் நிறைய இருக்கின்றன என அதனை விரட்டுவதற்கு நேற்றிரவு ஸ்பிரே அடித்துள்ளனர். இதில், சில விஷ பொருட்கள் இருந்துள்ளன. இதனால் ஏற்பட்ட பாதிப்பை அடுத்து உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர் என பெங்களூரு மேற்கு காவல் துணை ஆணையாளர் எஸ். கிரிஷ் கூறியுள்ளார்.

அவர்களில் 3 மாணவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டு ஐ.சி.யு.வில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ஜெயன் வர்கீஸ், திலீஷ் மற்றும் ஜோ மோன் என தெரிய வந்துள்ளது. இதுபற்றி எலிகளை விரட்ட ஸ்பிரே அடித்த, விடுதி மேலாண்மை பணியாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்