புனேவில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு ராணுவ பயிற்சி நிறைவு

புனேவில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு ராணுவ பயிற்சி நிறைவு பெற்றுள்ளது.

Update: 2024-11-21 16:09 GMT

Image Courtesy : ANI

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேவில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் ராணுவ படைகள் இணைந்து 'ஆஸ்திராஹிந்த்' என்ற பெயரில் 3-வது கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டன. கடந்த 8-ந்தேதி தொடங்கிய இந்த கூட்டு ராணுவ பயிற்சி, இன்றைய தினம் நிறைவு பெற்றது. இந்த நிறைவு விழாவில் இரு நாட்டு ராணுவ படைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டு ராணுவ பயிற்சி முதல் முறையாக கடந்த 2022-ம் ஆண்டு ராஜஸ்தானில் தொடங்கியது. தொடர்ந்து 2023-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து 2024-ம் ஆண்டுக்கான 'ஆஸ்திராஹிந்த்' பயிற்சி புனேவில் நடைபெற்றுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் ராணுவ படைகளிடையே ஒத்துழைப்பு மற்றும் கூட்டு புரிந்துணர்வை மேம்படுத்துவதற்காக இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பயிற்சியின்போது தேடுதல் வேட்டைகளை நடத்துவது, போரில் காயமடைந்த வீரர்களுக்கு முதலுதவிகளை வழங்குவது, ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்